Prayer to Our Lady of Expectation

ourladyofexp
PRAYER TO OUR LADY OF EXPECTATION

O! Divine Mother, dwelling on the blood – drenched Mount of St. Thomas! Mother expecting and Mother bearing the Christ in your holy womb! Shower Thy blessings on us who venerate you. Protect us from the treacherous Satan. Shelter us in the tabernacle of thy womb. O! Holy womb that bore our Lord Jesus Christ, Mould us as expected by your beloved Son. Let our families inculcate good virtues, Let Thy peace fill our families, Let the faithfulness be strengthened among the couples, Let the voice of vocation be heard and answered, Let wisdom, understanding and knowledge be implanted in our Children. Bless us with employment and industrial development. Bless us with Good rain, agricultural growth and decent shelter. Bless us with the gift of Children; mothers with safe delivery; journeys with safety and with a burdenless life. Bless those who lost their spouse; orphans and destitutes; Physically challenged and socially afflicted; the poor and helpless immigrants. Let the priests and the religious lead a holy life, Let the flame of Spiritualismn grow among them. Let peace be in the world; Let love for mankind, solidarity among the religions and social justice be established. Make us depend on Christ Jesus in our day to – day life as you expect and say ‘Yes’ to God’s holy will. Lord! Like the holy seeping blood gush out from the cross carved by St. Thomas, Bless and make this Holy Mount the Faith Home of the world. – Amen!

1 Our Father.. 3 Hail Mary.. 1Glory be…

Holy Mother of Expectation! Pray for us.

இரக்கம் சொறியும் தூய தோமையார் இரத்த மலையில் கோவில் கொண்டுள்ள எம் அன்னையே இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த திருத்தாயே, உம்மை வாழ்த்திப்போற்றி வணங்குகின்றோம். திருமலைப்படியேறி உம் திருப்பீடம் வருவோரை அருள்மழை மடியமர்த்தி உம் மகன் சீடர் ஆக்கும் அம்மா! இத்திருமலையை நாடி வரும் நாளெல்லாம் புண்ணியத் திருமகளாய் மலைவலம் வரும் நிறைவள மாதாவே! திருவுளம் தாங்கும் கருவளமே! கரும் சர்ப்ப அலகையால் அல்லல்படுவோரை உம்திரு கர்ப்பப்பேழைக்குள் காத்தருளும்! உம்திருவயிற்று ஆலயத்தில் மீட்பர் இயேசுவை உலகின் தெய்வமாய் உருவாக்கியது போல எம்மையும் உம் தெய்வீகக் கருவறையில் தாங்கி உம் மகன் விரும்பும் நல்லவர்களாய் உருவாக்கும்! எங்கள் அனைவரின் குடும்பங்களிலும் நற்குணங்கள் வளர, குடும்ப அமைதி நிலைக்க, தம்பதியரிடையே பிரமாணிக்கம் வலுப்பெற, தேவ அழைத்தல் உருவாக, ஞானம், அறிவு, கல்வி மேம்பாடு கிடைக்க, வேலை வாய்ப்புப் பெருக, தொழில் வளர்ச்சி பெற, பொருளாதாரம் சிறக்க, மழைபொழிய, விவசாயம் செழிக்க, நிலம், வீடு அமைய, நல்லவரன், மங்கள நிகழ்வுகள், குழந்தைப்பேறு, சுகப்பிரசவம், விபத்தில்லா பயணம், நோயற்ற நல்வாழ்வு. கடனில்லா வாழ்வு இவ்வரங்களை எமக்கருளும்! திருமணத்துணை இழந்தோர், கைவிடப்பட்ட வறியவர்கள், தாய்தந்தையற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், கவனிப்பாரற்ற முதியவர்கள், கொடும் நோய்களினால் அவதியுறும் நோயாளிகள், நாட்டை, உறவினர்களைப் பிரிந்த வெளிநாட்டோர் அனைவரும் உம் திருமடி சுகம் பெற பரிந்துபேசும். குருக்கள். துறவறத்தார் புனித வாழ்வு வாழ், உண்மை ஆன்மீகம் தழைக்க, உலக அமைதி, மனித நேயம், மத ஒற்றுமை, சமூக நீதி ஓங்க மன்றாடும்! நீர் எதிர்நோக்கிக் காத்திருந்த ஆண்டவர் இயேசுவை நாள்தோறும் எம்வாழ்வில் ஆவலுடன் எதிர்நோக்கி உம்மைப்போல் நாங்களும் இறைத்திருவுளத்திற்கு ஆகட்டும் என்று சொல்ல கற்றுத்தாரும்! தூய தோமா செதுக்கிய கற்சிலுவையில், இரத்தம் சொறிய வைத்து உமது அருள் பிரசன்னத்தை வெளிப்படுத்திய இறைவா! இத்திருமலையை உலகமனைத்திற்கும் நம்பிக்கையின் இல்லமாக்கி ஆசீர்வதிப்பீராக! ஆமென்.

இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த சுருத்தாங்கிய மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

ourladyofexptamil
Scroll to Top