Prayer to St Thomas the Apostle

st thomas
PRAYER TO ST. THOMAS, THE APOSTLE

O St. Thomas, the Apostle of India, Father of our faiths, you spread the light of Christ in the hearts of the people of India. You humbly confessed “My Lord and My God” and sacrificed your life for love of him. We pray you to strengthen us with love and faith in Jesus Christ so that we may dedicate ourselves totally to the cause of the kingdom of justice, peace and love. We pray that through your intercession we may be protected from all trials, dangers and temptations and be
strengthened in the love of the Triune God, Father, Son and the Holy Spirit. Amen.

1Our Father… 3 Hail Mary.. 1 Glory be…

St. Thomas, The Apostle of india Pray for us!

புனித தோமையாரிடம் செபம்

இந்தியாவின் திருத்தூதரே, புனித தோமையாரே,
என் ஆண்டவரே! என் கடவுளே! என்று
விசுவாசத்தை அறிக்கையிட்டவரே. எம் நாட்டு
மக்களுக்கு அன்புடன் நற்செய்தி அறிவித்து,
இத்திருமலையில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்திய
உம்மை வணங்குகிறோம்.
நீர் அறிவித்த இயேசு ஆண்டவரை நாங்களும்
அறிவிக்கவும், நீர் அறிமுகம் செய்த அன்னை
மரியாளை ஆர்வமுடன் நாடி வரவும்,
கிறிஸ்துவின் மீது நாங்கள் ஆழ்ந்த
பற்றுக்கொள்ளவும், அவரை ஆவலோடு பின்பற்றி,
எம் வாழ்விலே வரும் துன்ப துயரங்களை,
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் சக்தியை
பெற்றுத்தாரும். எம் துன்ப நேரங்களில் எம்முடன்
இருந்து எமக்காக பரிந்து பேசியருளும். உமது
வல்லமை மிக்க பரிந்துரையால் என்னையும் என்
குடும்பத்தையும் நன்மைகளால் நிரப்பும். எங்கள்
பாதுகாவலரான புனித தோமையாரே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும். ஆமென்.

1 விண்ணுலகில்… 3 அருள் மிகப்பெற்ற… 1 தந்தைக்கும்…

திருத்தூதர் புனித தோமையாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

st thomas tamil
Scroll to Top